Friday, August 6, 2010

தமிழாய் தமிழுக்காய் !

மழலைத்தமிழ் பேசாத எனக்காய்
தமிழ் மொழித்தாய் ஒருத்தாய்
பேதத்தால் கண்ட அங்கலாய்ப்பாய்
உன்னுள் உள்ளதோ பலதாய் !
தமிழ்ப்பெண்ணின் அகத்திணையும் புறத்திணையும்
ஈசன் குணம் இரண்டாய்
கொடைவகை மூன்றும் , மறை வேதம் நான்கும்
வாழும் வகை செய்வதால்
சிற்றின்பம் வலியுறுத்தும் காதலின்மேல் வந்த ஐயமற
மரபுணர்த்தும் அறிஞ்ஞனைப்போல்
தாய்க்கும் தந்தைக்கும் பூதங்கள்,குரவர்கள்,குழுக்கள்,
காப்பியங்கள், காற்றின் குணம், மா பாதகம்,பாவகை,இலக்கணம்
ஆற்றுபடையனைத்திர்க்கும் ஐந்தின்மேல் கொண்ட பேரின்பத்தாலோ?
பெற்ற நாசுவையுனர்த்தும் ஆறு.
சுகமும்,செல்வமும் தரும் பருவ மங்கையரரும்,கொடை வள்ளல்களும் ஏழு.
என்பேராயமும்,அட்ட மங்கலமும், தொகையும் எட்டு.
நடிப்பில் காட்டும் இரசங்கள் மும்மூன்று.
ஆண் பெண் சமத்துவம் எண்பதினால் இருவருக்கும் இணையாக
தமிழ் பிள்ளைப்பருவம் கொண்டாயோ பத்து?.
இராசிகள் போல அகத்தியனின் மாண்ணாக்களும் ஆறிரண்டு.
வாழ்த்தினால் வரும் பேறு எட்டிரண்டு.
வெப்ப நிலை மாறியதால் உன்னில் மூன்றாறுபொழுது.
ஆக கலைகள் மொத்தம் நான்கு பதினாறு.
கொண்டதினால் தமிழுக்கு நிகர் தமிழே!

No comments:

Post a Comment